28-03-2009

Jos Wijnant

உலகில் நீண்ட காலம் உயிர் வாழ்பவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர் அமெரிக்க நாட்டு பெண்மணி (113 வயது) ஒருவர். ஆனால் அராபிய நாடு ஒன்றில் 130 வயது பெண்மணி வாழ்ந்து வருவதாக கதை ஒன்று இருக்கின்றது. அவர் தான் உண்மையில் கின்னசில் இடம் பெற வேண்டியவர். போதிய அத்தாட்சிகள் இல்லாததால் இன்னும் இடம் பெறவில்லை. அதற்கான தேடுதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றனவாம்.



இதற்கிடையில் கொலண்டில் அதிக நாட்கள் உயிர் வாழ்பவர் நேற்று தனது 107 வயது பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றார்.

Jos Wijnant 1902ம் ஆண்டு மார்ச் 27ம் திகதி பிறந்தவர். நாளை 29ம் திகதி அவர் தனது பிறந்த நாளை 4 பிள்ளைகளுடனும், 13 பேரக்குழந்தைகளுடனும், 16 பூட்டப்பிள்ளைகளுடனும் hall எடுத்து பெரு விமர்சையாக கொண்டாட இருக்கிறாராம். அவருடைய நீண்ட ஆயுளின் ரகசியம் என்னவென்று கேட்டால் " ஒன்றுமில்லை சாப்பிடும் போது ஒரு கப் வைன் குடிப்பேன்,தேவையற்ற எதுவும் உட் கொள்வதில்லை. எங்காவது ஒருநாள் மது அருந்துவேன். அதுவே போதும். வேறில்லை" என்கிறாராம்.

நன்றி
Telegraaf

பெண்களின் உதைபந்தாட்டம்

கொலண்டில் Bodegraven என்னும் இடத்தில் கடை ஒன்றில் இரு பெண்கள் ஒருதரை ஒருத்தர் தாக்கிய சம்பவம் ஒன்று நடந்திருக்கின்றது. என்ன நடந்தது என்று நியூஸ் பேப்பரை வாசித்தால்...

கடை ஒன்றில் வரிசையில் முண்டியடித்த 31 வயசு கர்ப்பமான பெண்ணை வரிசையில் நின்ர 18 வயசு பெண் தாக்கி இருக்கிறார். முதலில் வாய்ச்சண்டையாக தான் ஆரம்பித்து பின்னர் கை, காலாக மாறி சிறியவர் பெரியவரை காலால் வயிற்றில் உதைத்திருக்கிறார். கடையில் வேலை செய்பவர்களும் , கூட நின்றவர்களும் இருவாரையும் பிரிக்க முயன்று முடியாத நிலையில் உதை விழுந்துள்ளது. அம்புலன்ஸ் வந்து பெரியவரை செக் அப்புக்காக கூட்டி சென்று விட்டதாம்.

இதில் புரியாத விசயம் என்னவென்றால் கர்ப்பம் என்று தெரிந்து தான் உதைந்தாரா இல்லை தெரியாமல் உதைந்தாரா என்பது தான். 2 அல்லது 3 நிமிடங்கள் தானே என்று பெரியவர் வெயிட் பண்ணி இருக்கலாம். என்றாலும் முண்டியடித்ததுக்கு இது பெரிய உதை தான். இல்லையா?

நன்றி
www.Spits.nl

27-03-2009

என் முதற்காதலி ..

இந்த அமாவாசை
உன் பௌர்ணமிக்காக
ஏங்குகிறது - உன்
இரத்தத்தினால் நெய்யப்பட்ட
என் இதயம்
உன் பெயர் சொல்லித்தான்
துடிக்கின்றது- நான்
சுவாசிப்பதே நீ
விட்டுச் சென்ற
மூச்சுக் காற்றினால் தான்...
என் கண்கள் உன்னைக் காண்பதற்காக
தான்இரவில் விழி மூடுகின்றது...
உன் விரல்கள்
பிடித்து நடக்காததால் - என்
கை விரல்கள் நடக்கும் போது
விரிய மறுக்கின்றன...
நீ இல்லாது - நான்
தனித்துப் போவேனென்று
தெரிந்திருந்தால்
உன் கருவிலேயே
உன்னுடன் கலந்திருப்பேன்..!!
நீ எனக்கு
காட்ட வேண்டிய
நம் உறவுகள்
எல்லாம்
உன்னை எனக்குக்
காட்டுகிறார்கள்- என்
தவிப்புக்கள்
உனக்குத் தெரியவில்லையா....?
என் முதன் முதற் காதலியே..........
உன் பெயரை
முதற் தடவை
உச்சரிக்கின்றேன்...
என் கனவிலாவது
என்னிடம்
ஓர் தடவை வா.............

அம்மா...........!

26-03-2009

உரிமைப்போர் -பெல்ஜியம் 16-03-2009

16-03-2009 அன்று நடந்த உரிமைப்போருக்கு பஸ்ஸில் நானும் உறவினர்களுடன் சென்றிருந்தேன். மெய் சிலிர்க்க எல்லோருடனூம் இணைந்து நம் ஈழத்துக்காய் நானும் என்னாலான பணியை செய்ய முடிந்ததை எண்ணி ஒரு திருப்தி இருந்தாலும், எப்போது நம் ஈழம் நம் கையில் கிடைக்கும் என்ற ஆதங்கம் தான் பெரிதாக இருந்தது.

ஊரில் போர் நடக்க இங்கு நடக்கும் உரிமைப்போரிற்காய் பாரிசில் இருந்து சைக்கிளில் வந்து சேர்ந்த 7 இளைஞர்கள் நம் தாயகக்கொடியை ஏற்றி வைத்து உரிமைப்போரை தொடங்கி வைத்தார்கள். அதற்கு முன்னதாக ஊர்வலம் இடம்பெற்றிருந்தது. கொடியேற்றியன் பின் நம் ஈழத்து மக்களுக்காகவும் 2 நிமிட மௌன அஞ்சலியோட நம் உரிமைப்போர் தொடங்கியது. தொடர்ந்து வேற்று நாடுகளில் இருந்து வந்த இளைஞர்கள் யுவதிகளின் உரைகளோடும் இடைக்கிட எழுச்சி பாடல்களோடும் தொடர்ந்த உரிமைப்போர் மாலை 5.30 மணியளவில் கொடி இறக்கத்தோடு நிறைவு பெற்றது.

மாவீரர் பாடல்கள்..

மாவீரரை பற்றி எழுத எனக்கு வார்த்தைகள் இல்லை. அதனால் அவர்களின் தியாகத்தை பற்றி பேச நான் என்றைக்குமே முனைந்ததில்லை.

ஆனால்....

அவர்களை நினைத்து பாடல்கள் கேட்பதுண்டு. அப்படி அவர்கள் நினைவினில் உதிர்ந்த பாடல்களில் எனக்கு பிடித்த இரு பாடல்கள் இவை.நீங்களும் கேட்டுப்பாருங்களேன்..

மாவீரரே...


பாசறையில் பூத்து
கல்லறைகளில் உறங்கும்
மாவீரர்களே............

நீங்கள் ஒடுக்கப்பட்ட
நம் தமிழினத்திற்காக
மண்ணிற்க்குள்
புதைக்கப் பட்டு,
விதைக்கப் பட்டவர்கள்.

நீங்கள் மண்ணிற்க்குள்
புதைக்கப் படவில்லை
நமது தாயகமெனும்
கட்டிடத்திற்க்கு
உறுதியான
அத்திவாரமாக்கப் பட்டவர்கள்.

மண்ணிற்க்குள்
விதைக்கப்பட்ட
உங்களின் கனவுகள்
எரிமலைகளாக
குமுறிக்கொண்டிருக்கின்றன
நாளை நிச்சயம்
எரிமலைகள்
வெடித்துச் சிதறும்
அப்போது உங்கள்
ஆசைகள் நிறைவேறும்

உறங்குங்கள்
அமைதியாக அதன்பின்பு......

24-03-2009

சமாதானமே...


சமாதானமே
எங்கே
புதைந்து போனாய்......?
கல்லறைக்குள்ளா.....?
எங்கே
புதைந்து கொண்டிருக்கின்றாய்....?
அரசியல் வாதிகளிடமா....?
நீ........
இல்லாத வெற்றிடம்
நரகமாக கிடக்கின்றது
எங்கள்
உயிரே
நீ வா.........!

23-03-2009

எங்கள் ஊர்...


மலர்களிலே குருதி மணக்கிறது,
நாளை அவைகள் குண்டுகள் காய்க்கலாம்
வண்டுகள் இப்பொழுதெல்லாம்
தேன் குடிப்பதில்லை - அவை
குருதி குடிக்கப் பழகியதால்
துப்பாக்கிகளையல்லவா காதலிக்கின்றன.

காற்றில் உயிர்கள் மிதக்கின்றன - அவை
பலாத்காரமாக பறிக்கப் பட்டதனால்
உரிய இடம் சேராமல்
காற்றில் மிதந்து அலைகின்றன.

நாளைகளில்......
ஊர்கள் இருக்கும்.
புல் பூண்டு, மிருகம், பறவைகள்
எல்லாமே இருக்கும்.
மனிதனைத் தவிர...!
 

சாரல் © 2008. Template Design By: SkinCorner