- ஜலதோசத்தினால் அவதிப்படும்பொழுது: வெங்காயத்தை மென்று சாப்பிட்டு விட்டு ஒரு தம்லற் சுடுநீரும் அருந்தி விட்டு படுத்தால் ஜலதோஷம் பறந்து விடும்.
- தொண்டை எரிச்சலுக்கு: வெங்காயத்தை அரைத்து பற்றுப்போடலாம்.
- தூக்கமின்மைக்கு: வெங்காயத்தை சற்று நுகர்ந்து விட்டு படுத்தாலோ அல்லது வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தாலும் நல்ல தூக்கம் வரும்.
- காக்கை வலிப்பு உள்ளவர்கள்: தினசரி உணவுடன் வெங்காயத்தை வேக வைத்து உண்டு வந்தால் நோயின் தீவிரம் குறையும்.
விட்டமின் சி உள்ள வெங்காயம் பற்களுக்கு மிக நல்லது.
- உணவில் நிறைய வெங்காயம் சேர்த்தால் பல்வலி வராது.
பெரிய வெங்காயம் இனிப்பான தன்மையை கொண்டதால் உணவில் ஒரு வித்யாசமான ருசியைக் கொடுக்கின்றது. இப்போது பெரிய வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் சிலவற்றறப் பார்ப்போம்.
- மாதவிடாய் வயிற்றுவலிக்கு: வெங்காயத்தை நெய்யில் வதக்கி அல்லது தயிரில் கலந்து உண்டு வந்தால் வயிற்று வலி நின்று விடும்.
-சூட்டு உடம்பு உள்ளவர்கள்: வில்வ இலையுடன் வெங்காயத்தையும் (தண்ணீரும் சேர்த்து) மூடி வேக விட்டு காலை , மாலை என இருவேளை அருந்தி வந்தால் சூடு தணியும்.
இப்படி பல மருத்துவ அம்சங்களை கொண்டது வெங்காயம்.
இப்போது சொல்லுங்கள் யாராவது " வெங்காயம்" என்று சொன்னால் கோவப்படதோணுமா??? இல்லை தானே?
நன்மைகள் சொல்லும் பொழுது அதை தீமைகளையும் சொல்லத்தான் வேண்டும். வெங்காயத்தின் தீமைகளில் ஒன்று..
- வெங்காயத்தை வெட்டியதும் சமைத்திட வேண்டும். சிறிது நேரம் வைத்தாலும் வெங்காயம் காற்றில் உள்ள கிருமிகளை தன் வசம் ஈர்த்து விடும். அப்படியான தன்மை கொண்டது வெங்காயம்.
டிப்ஸ்: வெங்காயத்தை ஒரு போதும் வெட்டியபின் கழுவ கூடாது. கவியபின்னரே வெட்ட வேண்டும்.
.................
என்னதான் இருந்தாலும் வெங்காயம் என்றதும் என் ஞாபாகத்திற்கு வருவது. ஊரில் பழைய சோறும் வெங்காயமும் கடித்து சாப்பிடுவது தான். அதன் ருசியே தனி. அப்படி சாப்பிட்டு வந்தால் கண்ணுக்கு நல்லது எனவும் கேள்விப்பட்டேன்.
அப்புறம் முக்கியமான ஒன்று!! பாசிப்பயறு, வெங்காயம்,வெள்ளரி கொஞ்சம் உப்பு இட்டு காலையில் ஒரு கப் சாப்பிட்டு வந்தால் இளமையுடன் இருக்கலாம்!!!!!
நன்றி,
குமுதம்