13 ஏப்ரல் 2009 அன்று Hilversum எனும் நகரில் மீடியாக்களுக்கு உரிய இடத்தில் இடம்பெற்ற கவனியீர்ப்பு போராட்டம் வெற்றி எனவே கருதலாம். காரணம் அங்கு வந்த மீடியாக்கள் அனைத்தையும் ஈர்த்து கொலண்ட் நாட்டின் முக்கீயமான பத்திரிகைகளின் செய்தியாக மக்களின் கவனத்தை ஈர்க்க இன்று மாலையே வெளிவந்து விட்டது.
கவனயீர்ப்பு போராட்டம் மீடியாக்கள் உள்ள இடமான MEDIA PARK எனும் இடத்திலேயே இடம் பெற்றது. அனுமதி இன்றி தொடங்கிய போராட்டத்தில் காவல்துறையினர் வந்து நின்றாலும் எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் போராட்டம் நடைபெற்றது. கடந்த தினங்களாக கொலண்ட் பாராளுமன்றம் முன்னதாக இடம்பெற்ற போராட்டங்களில் பொலீசாரின் தாக்குதல்கள் இடம்பெற்றது. ஆனால் இங்கு அப்படியான சம்பவங்கள் எதுவுமின்றி மீடியாக்களின் கவனத்தை ஈர்த்து போராட்டம் 4 மணிக்கு முன்பாகவே முடிவுற்றது.

போராட்டம் முடிவில் எல்லோரும் பாரளுமன்றம் முன்பாக உண்ணாவிரதம் இருக்கும் இரு பெண்களை சந்திக்க கிளம்பி சென்றார்கள். அங்கும் தங்கள் போராட்டத்தை சிறிதளவாக நடாத்தினார்கள்.
அத்தோடு கொலண்ட் வானொலி நிலைய மொன்று தமிழர் ஒருவரை இந்த பிரச்சனை களை பற்றிமேலும் தங்களுக்கு விரிவாக்கம் தர வேண்டி அழைத்துள்ளார்கள். 13 ஏப்ரல் இரவு 10 மணிக்கு கொலண்ட் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒன்றான எர்.ரி.எல் இல் இவ் போராட்டத்தின் விபரங்கள் இடம்பெற இருக்கின்றது.
இப்படியாக மீடியாக்கள் முன்னால் நடபெற்ற போராட்டம் கொலண்ட் வாழ் மக்களை சென்றடையும் முகமாக கொலண்டின் முக்கியமான வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்களில் இடம்பெற இருப்பது இப் போராட்டத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்!!
மேலும் சில படங்கள்...
0 கருத்துரைகள்:
Een reactie posten