18 ஏப்ரல் கொலண்ட் Denhaag மாநகரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெற்றது. Denhaag centrale station ல்( தொடரூந்து நிலையம்) மாவீரர்களுக்கும், போரில் இறந்துபோன மக்களுக்கும் அகவணக்கத்தோடு தொடங்கிய இவ் ஊர்வலம் கொலண்ட் பாராளுமன்றம் வரை பொலீசார் உதவியுடன் உணர்வுபூர்வமாக சென்றடைந்தது.
ஊர்வலத்தின் முன் 9ம் நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் இரு தாய்மார்களான பிறெமினி, கஸ்தூரி அவர்களின் வாகனமும், அதன் பின் நம் மக்களின் கொலையுறுவதை காட்டும் சவப்பெட்டிகளும் அதன் பின்னால் எல்லோரும் " கொலண்ட் அரசே போரை நிறுத்து" என்னும் இன்னும் பல கோசங்களுடன் நடந்து சென்றனர்.
பாரளுமன்றம் முன்னால் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் கொலண்ட் அமைப்புகளின் அங்கத்துவர்களின் உரைகள் தமிழிலும் நெதெர்லாந்திலும் இடம்பெற்றன. இறுதியில் உண்ணாவிரதம் இருப்பவர்களில் ஒருவரான பிறேமினி ஜெஸ்லின் அவர்களின் உரையும் இடம்பெற்றது.
கடந்த முறையை விட இம் முறை பல ஊடகங்கள் இவ் ஊர்வலத்தை பதிவு செய்ததை காணக்கூடியதாக இருந்தது. அதை வீட வீதியிலும், பாரளுமன்றம் முன்னால் அமைந்திருத விடுதியில் அமர்ந்திருந்த அனைத்து நெதெர்லாந்து மக்களும் நம் உரைகளையும், கோசங்களையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்ததையும் காண மகிழ்ச்சியாக இருந்தது.
எதிர்வரும் செவ்வாயன்று பாராளுமன்றத்தில் இளையோர்களோடு முக்கிய சந்திப்பு ஒன்று இருப்பதாகவும் அதற்காக காலை 8 மணியிலிருந்தூஉ மதியம் 2 மணி வரை மீண்டும் ஆர்ப்பாட்டம் இருப்பதாகவும் அதற்காக அனைத்து மக்களையும் இங்கே கூடுமாறும் விடுத்த அறிக்கையோடு இப் பேரணி மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது.
19-04-2009
Abonneren op:
Reacties posten (Atom)
0 கருத்துரைகள்:
Een reactie posten