16-03-2009 அன்று நடந்த உரிமைப்போருக்கு பஸ்ஸில் நானும் உறவினர்களுடன் சென்றிருந்தேன். மெய் சிலிர்க்க எல்லோருடனூம் இணைந்து நம் ஈழத்துக்காய் நானும் என்னாலான பணியை செய்ய முடிந்ததை எண்ணி ஒரு திருப்தி இருந்தாலும், எப்போது நம் ஈழம் நம் கையில் கிடைக்கும் என்ற ஆதங்கம் தான் பெரிதாக இருந்தது.
ஊரில் போர் நடக்க இங்கு நடக்கும் உரிமைப்போரிற்காய் பாரிசில் இருந்து சைக்கிளில் வந்து சேர்ந்த 7 இளைஞர்கள் நம் தாயகக்கொடியை ஏற்றி வைத்து உரிமைப்போரை தொடங்கி வைத்தார்கள். அதற்கு முன்னதாக ஊர்வலம் இடம்பெற்றிருந்தது. கொடியேற்றியன் பின் நம் ஈழத்து மக்களுக்காகவும் 2 நிமிட மௌன அஞ்சலியோட நம் உரிமைப்போர் தொடங்கியது. தொடர்ந்து வேற்று நாடுகளில் இருந்து வந்த இளைஞர்கள் யுவதிகளின் உரைகளோடும் இடைக்கிட எழுச்சி பாடல்களோடும் தொடர்ந்த உரிமைப்போர் மாலை 5.30 மணியளவில் கொடி இறக்கத்தோடு நிறைவு பெற்றது.
1 கருத்துரைகள்:
பறவாயில்லையே பெல்ஜியம் எல்லாம் போறீங்க, உங்களை போல ஒவ்வொருவருக்கும் உணர்வு வந்து இப்படியான போராட்டங்களில் கலந்து கொண்டு எமது எழிச்சியை உலகுக்கு கொண்டு வரல் வேண்டும். பதிவுக்கு நன்றி வாசகி.
Een reactie posten