27-03-2009

என் முதற்காதலி ..

இந்த அமாவாசை
உன் பௌர்ணமிக்காக
ஏங்குகிறது - உன்
இரத்தத்தினால் நெய்யப்பட்ட
என் இதயம்
உன் பெயர் சொல்லித்தான்
துடிக்கின்றது- நான்
சுவாசிப்பதே நீ
விட்டுச் சென்ற
மூச்சுக் காற்றினால் தான்...
என் கண்கள் உன்னைக் காண்பதற்காக
தான்இரவில் விழி மூடுகின்றது...
உன் விரல்கள்
பிடித்து நடக்காததால் - என்
கை விரல்கள் நடக்கும் போது
விரிய மறுக்கின்றன...
நீ இல்லாது - நான்
தனித்துப் போவேனென்று
தெரிந்திருந்தால்
உன் கருவிலேயே
உன்னுடன் கலந்திருப்பேன்..!!
நீ எனக்கு
காட்ட வேண்டிய
நம் உறவுகள்
எல்லாம்
உன்னை எனக்குக்
காட்டுகிறார்கள்- என்
தவிப்புக்கள்
உனக்குத் தெரியவில்லையா....?
என் முதன் முதற் காதலியே..........
உன் பெயரை
முதற் தடவை
உச்சரிக்கின்றேன்...
என் கனவிலாவது
என்னிடம்
ஓர் தடவை வா.............

அம்மா...........!

0 கருத்துரைகள்:

Een reactie posten

 

சாரல் © 2008. Template Design By: SkinCorner